தர்மம் - அறம், அர்த்தம் - பொருள், காமம் - இன்பம், மோக்ஷம் - வீடுபேறு, இவையே சனாதன தர்மத்தில் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. நம் தமிழ் கலாச்சாரம் வேறு, ஹிந்து கலாச்சாரம் வேறு என்று சொல்பவர்கள், திராவிட மாயையில் சிக்கியவர்கள் இவ்வாறு சொல்வதுண்டு. தனித் தமிழ் தேசியம் பேசி நாட்டைத் துண்டாட நினைத்தவர்கள் உண்டு. ஆண்ட சாதியினர் செய்த அடக்கு முறையாலும், முகலாய, மேற்கத்திய கிறிஸ்தவ ஆதிக்கத்தினால் இந்த ஆரிய திராவிட மாயை நம் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்க பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டது.
ஆண்ட சாதியினர் வர்ணாஸ்ரமத்தை தவறாக செயல் படுத்தினர். வர்ண முறையை தவறாக புரிந்து கொண்டு எளிய மக்களை வதைத்தும், தங்கள் சத்திரிய கடமையை மறந்தும், நாட்டைக் காக்கவும் மறந்தும், தங்களுக்குள் பூசலில் ஈடுபட்டும் சனாதன தர்மத்தை காற்றில் பறக்க விட்டனர். மராட்டியத்தில் வீர சிவாஜி, தமிழகத்தில் மற்றும் ஆந்திரத்தில் நாயக்க மன்னர்கள், சிந்து கரையில் சீக்கிய மன்னர்கள், ஆகியோர் முகலாயர்களை எதிர்த்து நின்றனர். ஆயினும் பெரிதாக ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல இடங்களில் தேவையின்றி அந்நியர் ஆளுகைக்கு உட்பட நேரிட்டது. அலெக்சாண்டரையே எதிர்த்த புருஷோத்தமனின் வீரத்தை புகழ ஆளின்றி, வெளிநாட்டு பயணிகள் இங்கே வந்து எழுதிய பயணக்குறிப்புகளைக் கொண்டு பாரதத்தின் வரலாற்றை மொத்தமாக மாற்றி சித்தரித்து போதிக்க வழி வகை செய்யப்பட்டது.
இஸ்லாமியர் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட உருவ வழிபாட்டை எதிர்க்கவும், மதம் மாற்றி தங்கள் ஆளுகைக்குள் ஹிந்து மக்களை கொண்டு வரவும், கோவில்கள் இடிப்பு, விக்கிரகங்கள் உடைப்பு, நூலகங்கள் எரிப்பு, கட்டாய மத மாற்றம், வாள்முனையால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நாச வேலைகள் போன்ற அச்சுறுத்தல்களால் ஹிந்துக்களை அடக்கியும் வைத்திருந்தனர். இச்செயல்களை வரலாற்றில் விரிவாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் மெய்சிலிர்த்து எழுதியுள்ளார்கள்.
1600கள் வாக்கில் வியாபாரம் செய்து பொருளீட்ட வந்த மேற்கத்தியர்கள் - ஐரோப்பியர்கள், அதாவது பிரிட்டிஷ், டட்சு, பிரெஞ்சு, முதலான நாடுகளை சேர்ந்த மக்கள் பாரதத்தை ஒரு மிகப்பெரிய வணிக சந்தையாக பார்த்தார்கள். இங்கே இருந்த வளங்களை தங்கள் பனி நிறைந்த நாடுகளுடன் ஒப்பிட்டு இந்த நாட்டின் வளங்களை சூறையாட இங்கே உள்ள மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் விழச்செய்தார்கள். ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களையும், ஹிந்துக்களுக்குள்ளே சாதிய கட்டமைப்பில் ஒருவருக்கெதிராக மற்றொருவரை தூண்டியும் தங்கள் சுரண்டலுக்கும் செல்வச்செழிப்பிற்கும் எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டனர். கிறிஸ்தவ போதனை மையங்களை துவக்கினார்கள். செயற்கையான பஞ்சங்களை உருவாக்கினார்கள். விசுவாசத்தை ஏசுவுக்கு அளித்தவர்களுக்கு கல்வியும், உணவும் தரப்பட்டது. நாடெங்கும் சமஸ்க்ரித ஆசிரியர்களுக்கு பதிலாக ஹிந்தி மொழி கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
ஆனால் அப்போதைய வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இருந்த நிலச்சுவான்தார்களும், ஜமீன்தார்களும், சிற்றரசர்களும் வெள்ளையர்களுக்கு வரி கட்டி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துக்களை ஆளவே முற்பட்டனரே அன்றி சனாதன தர்மம் என்னும் பாரதத்தை இணைக்கும் பெரும் சங்கிலியை கையிலெடுக்க துணியவே இல்லை. அற்புத அறிவியல் ஆக்கங்களை நமக்கு ஆக்கியளித்த ஜெகதீஷ் சந்திரபோஸ், சத்யேந்திரநாத் போஸ், CV இராமன், மேக்நாத் சாஹா, ஸ்ரீனிவாச ராமானுஜன் போன்றாரின் அறிவை முன்னெடுத்து ஆக்கங்களை வளர்க்காமல் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்து தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்வதிலேயே குறியாய் இருந்தனர். 1857இல் சிப்பாய் கலவரம் துவங்கியதும் அதன் பிறகு தேச பக்தி வளரத் துவங்கியதும், அந்த தேச பக்தி விடுதலை போராட்டமாக மாறியதும், அப்போராட்டம் சுபாஷ்சந்திர போஸ், மோகன்தாஸ் காந்தி ஆகிய இரு வழிகளில் பயணித்ததும் நாமனைவரும் அறிவோம்.
இன்றைக்கு பாரதம் விடுதலை அடைந்து 70 வருடங்கள் ஆகப்போகின்றது. நாமனைவரும் உண்மையிலேயே ஒரு தாய் மக்கள் என்னும் உணர்வோடு இருக்கிறோமா? இந்திய விடுதலைக்காக பாடுபட்ட எண்ணற்ற தியாகிகளை உண்மையிலேயே நாம் மனதில் நினைத்து வழிபடுகிறோமா? பதில் நிச்சயம் இல்லை என்று தான் வருகிறது. வெறும் தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டால் ஆண்ட சாதிகளான முக்குலத்தோருக்கும், நாயக்கர்களுக்கும், வன்னியருக்கும், கௌண்டருக்கும், பெண் கொடுக்கல் வாங்கல் இருப்பது இல்லை. நாடார்களுக்குளேயே ஹிந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்ற வேறுபாடு. தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி சொல்லவே வேண்டாம்; எப்போதும் ஒருவித பாதுகாப்பின்மையுடனேயே வாழ்கிறார்கள். பிராமணர்கள் ரொம்பவே ஒதுங்கிப் போகிறார்கள். எவ்வளவுதான் துரத்தி அடிக்கப்பட்டாலும் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் இன்னொரு பிராமணன் முதல் வேலையாக அவ்விடத்தை விட்டு அகல்கிறார்கள். மற்ற சாதியினாராவது தங்கள் சாதிக்காரனுக்கு ஒரு சங்கடம் என்றால் முன்வந்து அவனை காக்க முயல்கிறார்கள். பிராமணர்கள் சுத்தம். இடை நிலை சாதிகளான முதலியார், செட்டியார், பிள்ளைமார், ஆசாரி போன்றோர் தனி தனியாக பிரிந்துள்ளார்கள். இவ்வத்தனை சாதிகளும் செயல் படுகின்றனவோ இல்லையோ தங்களுக்குள் ஒரு சங்கம் வைத்துள்ளார்கள். இந்த சாதி சங்கங்களால் ஒரு சுக்கும் பிரயோஜனம் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும் சமுதாயத்தில் தங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமாம். பங்களிப்பு இல்லாமல் போகட்டும். ஆனால் பிரதிநிதித்துவம் கட்டாயம் இருக்க வேண்டும்.
இத்தனையையும் தாண்டி அரசியல் கட்சிகள் மக்களை பிரித்து வைக்கும் வேலையை சிறிதும் சிந்தாமல் சிதறாமல் சிறப்பாய் செய்கின்றன. தாழ்த்தப்பட்டோருக்கு காவலனாய்க் காட்டிக்கொண்டு குல்லா போட்டு ஆண்ட சாதியினரை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஹிந்து சனாதன தர்மத்தை எதிர்க்கும் மீசைக்காரர் கட்சி ஒரு புறம். ஆண்ட சாதி பெருமையை நிலை நாட்ட, தங்கள் சாதி மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்து, வடமாவட்டங்களில் எண்ணிக்கை அதிகமுள்ள வாக்கு வங்கியை நம்பிய மருத்துவர் கட்சி ஒரு புறம். நாம் தமிழர் தானா, இல்லை திராவிடரா, என்ற குழப்பத்திலுள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள்; நாம் திராவிடர் இல்லை, ஹிந்துக்களும் இல்லை, தமிழர் மட்டுமே என்று கோலோச்ச துடிக்கும் ஒரு கட்சி, கம்யூனிசம் என்ற நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத வறட்டு சித்தாந்தம் பேசும் ஹிந்து எதிர்ப்புக் கட்சிகள் இரண்டு, எதற்க்காக அரசியல் செய்ய வந்தோம் என்றே தெரியாமல் சரியாக தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னால் வாபஸ் வாங்குபவர் கட்சி. நிலச்சுவாண்தார் வம்சாவளியில் பிறந்து காசும் வைத்துள்ளமையால் பெருமைக்கு கட்சி நடத்தும் ஒரு தஞ்சாவூர்க்காரரின் கட்சி. திரைத்துறையில் வாய்ப்பில்லை என்பதால் முதல்வராக துடிக்கும் 2 பேர் நடத்தும் கட்சிகள். இன்னும் எத்தனையோ உப்பு சப்பில்லாத உதிரிக்கட்சிகள் மற்றும் சாதிக்கட்சிகள் உண்டு.
நாமனைவரும் ஒன்று படாமல் இருப்பதற்காக இந்தக் கட்சிகளுக்கு தனித்தனியாக தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களும் உண்டு. அநேகமாக நாமனைவரும் ஒற்றுமையாக இருப்பது கிரிக்கெட் போட்டிகளின் போது மட்டுமே. IPL வந்ததால் அதற்கும் வந்தது வேட்டு. நன்றாக யோசியுங்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு தாய் மக்களாய் நம்மை இணைப்பது எது? மொழியா, இல்லை, அவை நாடு முழுதும் 100கும் மேலேயே விதவிதமாய் பேசப்படுகின்றன. மதங்களா? ம்ம்ம்ஹ்ம்... அவை தாறுமாறாகப்பிரிக்கின்றன. சாதிகளா? சத்தியமாக இல்லை. அவை ஆயிரக்கணக்கில் சிதறுண்டு போயுள்ளன. நன்றாய் யோசியுங்கள், நம்மை இணைப்பது நம் பண்பாடு. நம் கலாச்சாரம். உயரிய ஆன்மிகம் பொதிந்த நம் இயற்கையுடன் இணைந்த வழிபாட்டு முறைகள். மலைகளை, நதிகளை, காடுகளை, கடல்களை, வானை, நிலத்தை, ஒளியை, அக்கினியை வழிபடும் நம் பண்பாடு. வழிபாட்டு முறைகளுள் சிறிதாய் வேற்றுமை இருப்பினும், காஷ்மீரம் முதல் கன்யாகுமரி வரை சிவன் சிவன் தான். விஷ்ணு விஷ்ணு தான். முருகன் முருகன் தான். இந்திரன் இந்திரன் தான். கற்பூரமும், தீபமும், வித விதமான தோற்றங்களிலான விக்கிரகங்களும், பழமும், பூக்களுமான அர்ச்சனைகளும், சிறு பலிகளும், படையல்களுமே நம்மை இணைப்பது. அதை தான் நான் உயரிய பண்பாடு என்கிறேன். இயற்கையுடன் இணைந்த வாழ்வு என்கிறேன். உழவு, நெசவு, கைத்தறி, அறம் சார்ந்த பொருளீட்டல், கிராமம் சார்ந்த வாழ்வு, கால்நடைகளின் மீது கருணை, அனைத்தையும் இறை வடிவாய்க் காணுதல், கைகுவித்து தொழுதல், விழாக்களில் களியாட்டுகள், வீரம் சார்ந்த போர்த்தொழில், நியாயம் சார்ந்த அறச்சீற்றம், இவையே நம் பண்பாடு. ஜல்லிக்கட்டு, சிலம்பம், மல்யுத்தம், வில்யுத்தம், பளுதூக்குதல் போன்ற வீர விளையாட்டுக்கள் நம் பாரம்பரியத்தின் சிறப்புக்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் கட்டிகாத்த இந்த அறிய பாரத பண்பாடு, அந்நியர் வருகைக்கு பிறகு பெயரிடப்பட்டது. சிந்து நதிக்கு இப்பால் வாழ்ந்த நம்மை ஹிந்துக்கள் என்றழைத்தனர். நம் வாழ்வு முறை தான் அறம்,பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் தர்மார்த்த காம மோக்ஷமாகும். இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக