சனி, 3 பிப்ரவரி, 2024

வள்ளுவமும் வர்ணங்களும்...!

வள்ளுவமும் வர்ணங்களும்...!

எப்படி மனிதனின் ரோமம் உதிர்வது அதன் செல்களின் இறப்போ, அது போல, மாத விடாய் என்பது பெண்ணின் கருமுட்டையின் உயிரிழப்பே! இது வெறும் உணவுக்கழிவு அல்ல.. இது உயிர்க்கழிவு.. ஆகவே கோவிலில், இறப்பு தீட்டிற்கிணையான இந்த மாத விடாய் காலங்களில், பெண்கள் உலவுவது தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. உங்கள் வீட்டுப்பூஜை அறையில் எப்படி சுத்தமாக இருப்பீர்களோ, அதை விட கோவில்களில் சுத்தமாக அவசியம். ஆன்மீகத்திற்கும் சுத்தத்திற்கும் என்ன உறவு என்று கேட்டால், மனநிம்மதிக்கும் நேர்மைக்கும் உள்ள உறவு போன்றதாகும்.

உடல் சுத்தமில்லாத அகோரிகளும், சித்தர்களும் ஆன்மீகவாதிகள் இல்லையா என்று கேட்டால், அவர்கள் கோவில், வழிபாடு, நலன் என்னும் வட்டங்களை, எல்லைகளை கடந்தவர்கள். அவர்களுக்கு கோவிலே தேவையில்லை. கடவுளை தரிசிக்க அவர்கள் உள்முகத்தேடலில் ஈடுபடுவார்கள். ஆனால் கோவில் என்பது நம் ஆன்மீக அனுபவத்தின் முதல் படி தான். ஒரு துவக்கம் தான். அங்கே சுத்தம் நிச்சயம் வேண்டும் தான். உடல் தூய்மை, உள்ளத்தின் தூய்மை அளிக்கிறது. ஏன் யாரும் பல் தேய்க்காமல் பிராணாயாமம் செய்வது இல்லை? அங்கே ஆன்மிகம் பின்னுக்கு பொய் வெறும் பயிற்சி என்கிற அனுபவமே மேலோங்கி இருக்கும்.
வர்ணம் சாதியை உருவாக்குவது இல்லை. தொழிழும் குணமுமே வர்ணத்தை உருவாக்குகின்றன.
மாறாக, சாதியை உருவாக்குவது குலம். குலத்தை உருவாக்குவது பிறப்பு. பாரத நாட்டில் இனரீதியான பிரிவுகள் இல்லை. நிற ரீதியிலான பிரிவுகளோ, வகைகளையோ இல்லை. தட்பவெப்ப நிலைக்கு தகுந்த இந்திய நிறம். தென்னிந்தியாவில் வெள்ளை வெளேரென்று இருக்கும் தூய தமிழ், கன்னடர், மலையாளிகளை அடையாளம் சொல்ல முடியும். மராட்டியத்தில் கருப்பான தூய மராட்டியரையும் காண்பிக்க முடியும். சாதிகளை ஹிந்து மதம் உருவாக்கவில்லை. ஹிந்து தர்மசாஸ்திரங்களும் சாதி பற்றி பேசவில்லை. வர்ணத்தை ஒருவன் இயல்பான குணமும் அவன் செய்யும் தொழிலும் தீர்மானிப்பதாகவே பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார். நிற்க.
சனாதன தர்மத்தின் வாழ்க்கை முறையை பற்றி திருவள்ளுவர் 3 பாகமாக பிரித்துக் கூறுகிறார்..
1. அறம், 2. பொருள், 3. இன்பம். வடமொழியின் நான்மறை காட்டும் 1. தர்மம்(அறம்), 2. அர்த்தம் (பொருள்), 3. காமம் (இன்பம்) மற்றும் 4. மோட்ஷம் (வீடுபேறு).
இந்த நான்காவது பகுதியான வீடுபேறு அடையும் நிலையை பற்றி வள்ளுவர் ஊழ் என்ற அதிகாரத்தை பகிர்ந்து உள்ளார். அது இல்லரவியலிலேயே உள்ளது. சனாதன தர்மமும், தமிழரமும் ஒன்று தான் என நிரூபிக்க இந்த ஒரு ஒற்றுமையே போதும்.. ஆனால் இந்த அளவுக்கு தெளிவாக தன்மையாக என்னை பகிரவிடாமல் செய்தனர் போலி ID போராளிகள்..

தமிழ் வாழ்க்கை முறையும் சனாதன தர்மமும் ஒன்று தான் என்பதற்கு வள்ளுவம் கூறும் குறள்களில் இருந்தும் மேற்கோள் காட்டவியலும்..

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."
 மேலும் மிக முக்கியமாக அந்தணரை விட மன்னர்களே அதிகாரமும், வலுமையும் மிக்கவர்களாக தமிழ் நிலத்தில் இருந்தனர் என்பதற்கு பின்வரும் குறளே சான்று...

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." 

மறுமொழிகள் இடும் போது முகமறியாய் புர்ச்சி போராளி ஒருவர் சொன்னது, பார்ப்பரவுங்க மூவேந்தரையும் ஏமாற்றி வாழ்ந்தாங்கனு.. ஆனால் வள்ளுவர் சொல்லிய மேற்கண்ட குறள் தமிழரின் சனாதன தர்மத்தில் அந்தணர் இடம் என்னவென்பதையும், அரசர் இடம் அதற்கும் மேலே என்பதையும் தெளிவாக கூறுகிறது... 

சாதிக் கொடுமைகளுக்கும் சனாதன தர்மம் காட்டிய வாழ்க்கை முறைக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை இன்னும் வலுவாக என்னால் ஆதாரத்துடன் காட்டவியலும்.. மன்னன் கோலை விட அந்தணர் சொல்லுக்கு மதிப்பு இல்லை என்ற தமிழர் நிலத்தில் மன்னரை மீறி எவ்வாறு அந்தணர் சாதிக்கொடுமைகளை நிகழ்த்த முடியும்? இன்றைக்கும் அவர்கள் 3% தானப்பா இருக்கிறார்கள்.

மன்னர்களும், அவர்களின் வாரிசுகளுமே படை நடத்தி அதிகாரம் செய்த காலத்தில் அவர்களை மீறி அந்தணர் ஒன்றும் செய்திருக்க முடியாது.. மன்னராட்சி காலம் முடிந்து முகலாய ஆட்சியில் சத்திரியர் வீழ்ந்த போதும், அதன் பிறகும் வந்த மன்னர்களின் வாரிசுகளான ஜமீன்தார்கள் ஆட்சியிலும் தீண்டாமையும், சாதிக் கொடுமைகளும் தலைவிரித்தாடிய சான்றுகள் அதிகம் கிடைக்கின்றன வரலாற்றில்.. அதன் பிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஒட்டுமொத்த பாரதமும் பஞ்சத்திலும், பட்டினியாலும் சிறையிலும் வாடியிருந்ததும், ஆண்ட சாதியினரும், பார்ப்பனர்களும், பணம் படைத்த முதலியார்களை, பிள்ளைவாள்களும், செட்டியார்களும் பிரிட்டிஷ் காலத்தில் செல்வாக்கோடு வாழ்ந்திருக்க, மற்றைய பிரிவினர் தொடர்ந்து மதம் மாற்றப்பட்டனர் என்பதே வரலாறு...

தீண்டாமை இன்றும் பேசப்படுகிறது... ஆனால் அது கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகு நின்று விடுகிறதா? கிறிஸ்த்தவத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் துளியும் இல்லை. ஆனாலும் கிறிஸ்தவ நாடார், தலித் கிறிஸ்தவர் வீட்டில் பெண் கொடுப்பதில்லை.

இங்கே முதலில் சாதி அரசியல் பேசி பிராமணரை தனிமை படுத்திவிட்டால் பிறகு எல்லாரையும் ஒன்று சேர்த்து சனாதன தர்மத்தை ஒழித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் சனாதன தர்மம் வாழ்வதே சத்திரியர்களாலும், வைசிய, சூத்திர வர்ணங்களாலும் தான் என்பது எந்த வெண்ணைக்கும் புரிவது இல்லை..

அந்தணர், வேதியர், மறையோர்,பார்ப்பனர் என்றெல்லாம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுவது தமிழகத்தில் மூவேந்தர்களின் ஆட்சியில் வாழ்ந்த பிராமணர்களையே.. அவர்கள் கோவில்களில் ஆகமம் கூறும் வடமொழியை பயன்படுத்தி வழிபாடு செய்வதை வைத்து அவரை தமிழர் அல்லர் என்றும் தமிழரின் வழிபாட்டு முறை வேறு என்றும் நிறுவ முயல்வோர் உண்டு... ஆனால் சனாதன தர்மத்தில் படையல் (நிவேதனம்), பூசை (அர்ச்சனை), சுடராட்டு (தீபாராதனை), குடமுழுக்கு (கும்பாபிஷேகம்), நாள், நட்சத்திரம் பார்ப்பது, ராசி, கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்வது எல்லாமும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வழக்கத்தில் இருந்து வரும் பண்பாடே.. பலவேறு தெய்வங்களுக்கும் பல்வேறு சமர்ப்பணங்கள்.. இறைச்சி, கள், சாராயம், மீன் முதல் பொங்கல், புளியோதரை, தயிர் சோறு என்று ஒரு சனாதனி தான் அருந்தும் உணவை படைத்தே பேரிறையை வணங்கி வந்திருக்கிறான். பலி கொடுக்கும் வழக்கமும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.. இவ்வழக்கங்கள் தமிழரிடம் மட்டுமல்லாமல் பாரதம் முழுவதுமே இருந்து வந்துள்ளது.. தமிழர்களின் 5 நிலங்களுக்கு கடவுளர்களாக தொல்காப்பியம் காட்டுவது, 1. இந்திரன், 2. முருகன், 3. திருமால், 4. கொற்றவை மற்றும் 5. வருணன். இவர்களை பற்றி சங்க இலக்கியங்களில் ஏராளமான தரவுகள் உள்ளன.
லிங்க வழிபாடு தமிழரின் தொல்வழிபாடு ஆகும், அதுவும் பாரதம் முழுமையும் பரந்திருந்தது என்பதற்கு ஏராளமான கோவில்களும் தொல்பொருள் ஆய்வுகுட்படுத்தப்பட்ட இடங்களும் சான்றாகின்றன..

சாதி அரசியல் எடுபடாமல் போவதற்கு இந்தப் பண்பாடே முழுமுதல் காரணம். இதை மூடப்பழக்கங்கள் என்று கூறி சிதைத்து விட்டால் இந்தியாவை முழுவதுமாக தன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடமுடியுமென்று இங்கிலாந்து பாராளுமன்றத்திலே பேசியவர் மெக்காலே எனப்படும் ஆங்கில பிரபு. பேசிய நாள் 2ம் பிப்ரவரி 1835. ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவினை முயற்சிகள் திட்டமிட்டு இவர்களால் உருவாக்கப்பட்டன..

சமஸ்க்ரிதம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வெகு மூர்க்கமாக எதிர்க்கப்டுகிறது.. அனால் மேற்கில் வலிந்து ஆராயப்படுகிறது.. குறித்து வைத்துக் கொள்ளுங்கள், நாளை அவர்களிடம் சமஸ்க்ரிதம் இருக்கும்.

முதல் குறளில் வரும் ஆதிபகவன் என்பதே சமஸ்கிருத சொல் தான் என்ற வாதத்திற்கு இல்லை அது தமிழ் சொல் என்று அடித்து வாதிட்டார் ஒரு தற்குரி. பொறுமையாக அவருக்கு சொல்ல வேண்டியது என்னவெனில் ஆதிபகவன் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கணத்தில் தி என்னும் ஒலிக்கு (dhi) என்னும் உச்சரிப்பு இல்லை. அதை த்தி என்று மட்டுமே சொல்லல் வேண்டும். dhi என்னும் ஒளியை கொண்டு வர நாம் அதற்க்கு முன்பாக ஒரு ந் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தியில், அந்தி மாலை, சந்தம், பந்தம், தந்தம், அந்தம் என்று எந்த தானாவுக்கும் முன்னர் ஒரு ந் சேர்த்துக்கொள்வது தான் தமிழின் ஒளியமைப்பில் வரும் இலக்கணம். அதனாலேயே தெலுகு என்று அவர்கள் சொல்வதை நாம் தெலுங்கு என்று ஒரு இங் சேர்த்து சொல்கிறோம்.

குறளில் ஆதிபகவன் என்று வருதலை நாம் காண்போம். இங்கே வசதியாக சேரல் + ஆதன் = சேரலாதன் என்று உதாரணத்தைக் கூறினார். ஆதலால் அது ஆதி என்றார். ஆதல் என்பது வேறு, ஆதி என்பது வேறு.
ஆவதால் ஆதி என்பது முழுப்பொய். ஆகுதல் என்பது ஆதியாக திரியாது. 'வானாகி' என்னும் சொல்லை 'வானாதி' என்று உச்சரிப்பது இல்லை, 'மண்ணாகி' என்பதை 'மண்ணாதி' என்றோ உச்சரிப்பது இல்லை. பொருள் மாறுபட்டு விடும்.
ஆகுதலால் ஆகின்றவன் ஆவான் தவிர ஆதியாக மாட்டான். அந்தமும் ஆதியாய் எழுதப்பட்ட முடிவும் மூலமும் தொட்டு தொடரும் இலக்கண நூலை நாம் அந்தாதி என்கிறோம். தமிழிலிலும் தனிச்சொல்லான ஆதிக்கு முதல் அல்லது மூலம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
முதலாக இருப்பவனை முதல் என்னும் சொல்லுக்கு ஈடாக ஆதி என்னும் சொல்லையும், பகவன் என்னும் சொல்லுக்கு ஈடாக ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், தனம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவன். அவன் இணையாள் பகவதி. 

தொடர்வோம்