ஞாயிறு, 11 டிசம்பர், 2016

What remains after all?

"What remains after all our experiences in life?" Do we really learn something out of each experiences? Or there is no ending for learning. I am not sure why life keeps on teaching things to us by consistently keeping us in struggles, puts us with back stabbers, situations that involve failure, betrayal, back biting, jealousy, rejection, that leads to agony, self pity, desperation, depression, worry, uncertainty, sadness, poverty, insecurity, and so on. Why would we go through all this?

On the other hand, we also go through good situations such as being loved, cared, appreciated etc., But these situations fail to make an staunch impression on our minds, but only the bad ones be remembered well enough by us. Are we really conditioned to forget the good things and remember only the bad things happened to us? If yes, can we change our thinking pattern? Is that so called 'Neuro-Linguistic Programming' possible?

I think, yes, but only to a certain extent. We can quickly recover from our defeats and jump into another fight, but we cannot promise anyone or be promised by anyone that we would definitely win that fight. Because winning or losing is not in our hands. I cannot promise my wife that I would get a job in a week's time without even knowing whether there would be an interview call or an invite for a walk-in. okay, if I get an interview call, again I am not sure, how many others have been called for; how far are they trained & skilled for the job and how much is my winning percentage? If I clear the rounds of interview, whether the company would pay me as per my expectations is another question. If yes, again how far would be my upcoming boss be supportive in my work and present my work in good light to the management.

So I cannot completely depend on myself. I have to depend on others too. So I start to forgive. I decide to keep a low profile towards my boss and my management so that I save my reputation and my job. Because as per the corporate ethics we learnt that "No matter how much you can perform, you can always be replaced". I now work on my skills on bending down and keep a smiley face for insults and hell load of work. i think I am saving my ass and my job, but am I really happy doing this? Hell NO!! So is there any meaning in doing this shitty piece of work? So here comes the wisdom like the Sun dawning to get rid of the darkness.

I undergo this pain to keep my family, my kids happy and to provide them with food, shelter & clothing. If I am not happy doing this, I cannot see myself being happy about my living. when I am reaching a stage that I educate my kids as per their aspirations and ensure that they can take care of their life, I win my battle that moment. Till then I need to be positive and keep working on all the bad situations. Will I win my battle? How will I win my battle? By going through these tough situations of life that breaks me in to pieces; tears down my dignity; thrashes me in to the ground by betrayal; slaps my ego with backstabbers, I must keep my spirits high and go on walking towards my goal. Unless I do this I cannot win my battle. I fight this battle to keep my people strong. I can win this battle by not quitting at any cost. What remains after all these fighting experiences? It is my Self satisfaction. That should be the nectar I get after all the snake bites.

வியாழன், 21 ஜூலை, 2016

சிறந்தவன் எவன்?



எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம். நம்ம மக்கள் ஏன் எப்பொழுது பார்த்தாலும் ஆன்டி ஹீரோக்களையே அதிகம் கொண்டாடுகிறார்கள். ஏன் நியாயமான ஹீரோக்களை, அவர்கள் எவ்வளவு தான் சிறந்தவர்களாக இருந்தாலும் ஒரு மாற்றுக்குறைவாகவே பார்க்கிறார்கள்?

ராமனை அவன் மனைவியை காட்டுக்கு அனுப்பியதால், வாலியை மறைந்திருந்து கொன்றதால் இகழ்வோர்களே அதிகம். பொதுவெளியில் கோவில்களில் வணங்கினாலும், உள்ளூர ஒரு ராவணப் பாசம் இருக்கத்தான் செய்கிறது. மனைவியை மாற்றான் சொல்லுக்காக காட்டுக்கு அனுப்பிய ராமனைவிட, தன் தங்கைக்காக மாற்றான் மனைவியை கடத்திய ராவணனை விரும்புகிறார்கள். மாற்றான் மனைவியான  சீதையை கடத்தி, அவளை தான் இச்சைக்கு இணங்க பலவாறு வற்புறுத்தியும், மிரட்டியும், கெஞ்சியும், நயந்தும் கேட்டும் அவனை  வெறுக்கவில்லை. ராவணனை ஒரு கதாபாத்திரமாக ரசிக்கின்றனர் நம் மக்கள். ஆனால், ராமன் என்ன தான் நல்லவனாக இருந்தாலும், 'ஒரு அவதாரம் எப்படி மனைவியை தள்ளி வைக்கலாம்? எப்படி ஒரு வானரத்தை மறைந்திருந்து தாக்கலாம்?' என்று அவனை மிகவும் கடுமையாக விமரிசிக்கின்றனர்.

அதே போல, மஹாபாரதத்தில் கர்ணனை மிகவும் வியந்து புகழும் மாந்தர்கள், அர்ஜுனனை அவனை விட தீரத்திலே குறைந்தவனாகவும், கர்ணன் நினைத்திருந்தால் அர்ஜுனனை பதினோராம் நாள் போரிலேயே கொன்றிக்க முடியும் என்பது போலவும், கிருஷ்ணனால் தான் அர்ஜுனன் காப்பாற்றப்பட்டான் என்பது போலவும் வாதிடுவார்கள். 

முதல் இருவரிலாவது ராமன், ஒரு அவதாரம். கடவுளின் அவதாரமான அவனை ராவணனுக்கு இணை வைப்பதே ஒரு அபத்தம். கடவுளே தன் நிலையிலிருந்து இறங்கி வந்து மனித ரூபம் எடுத்து எந்த வித மாய மந்திரங்களும், அமானுட சக்திகளையும் உபயோகம் செய்யாமல் ஒரு சாதாரணனாகவே வாழ்ந்து ராவண வதம் செய்ய வேண்டும் என்று விரும்பியதால் நிகழ்ந்தது ராமாயணம் என்பதால், ராமனைப் பற்றிய விமரிசனங்கள் ஒருவாறு சமாதானப்படுகின்றன.  ஆனால் இரண்டாம் வழக்கில் அர்ஜுனன் ஒன்றும் இறைவனின் அவதாரமல்ல. நர நாராயணர்களுள் ஒருவனாக இருப்பினும், அவன் ஒரு விண்ணகப் பேராற்றலான இந்திரனின் மகன் மட்டுமே. இறைவன் அல்லன். அதே போன்று கர்ணனும் சூரிய புத்திரன். பிறக்கும்போதே கவச குண்டலங்களோடு பிறந்தவன். இருவருமே இணையானவர்கள் தாம். வீரத்திலும், ஆண்மையிலும், வெல்லும் வேட்கையிலும் இணையானவர்கள் தாம். ஆயினும் கர்ணனின் வள்ளல் தன்மையினால் அவனை ஒருபடி உயர்த்தியே பேசுவோர் நம் மக்கள். 

கர்ணனை உயர்த்திப் பேசுவதற்கு வள்ளல் தன்மை மட்டுமா காரணம்? இல்லை. அவன் பிறந்த உடனேயே தாயினால் விலக்கப்பட்டவன் என்ற அனுதாபம் பாரதத்தை படிப்போர் நெஞ்சில் ஆழப்பதிந்து விடுகிறது. துரியோதனனுக்கும், யுதிட்டிரனுக்கும் மூத்தவனாக இருந்தும் அது வெளிப்படாமல் போனதால் ஒரு சிறிய ராஜ்யத்திற்கு மட்டும் அரசனாக காலம் தள்ள வேண்டிய நிலை அனைவருக்கும் அவன் பால் இரக்கத்தை ஏற்படுத்தியது. அவனின் தவறு எதுவுமே அன்றி அவன் ஒரு சூதனால் வளர்க்கப்பட்டதாலும், அவ்வளர்ப்பே அன்றைய ஆண்ட சத்திரிய குலங்களை அவனுக்கு எதிர்ப்பாக நிறுத்தியதாலும், பாரதம் படிப்போருக்கு கர்ணன் மேல் அளவில்லாத பாசமும் இரக்கமும் உண்டாக வழிவகை செய்கின்றன. எப்படியாவது கர்ணனுக்கு உண்டான இடமும், பீடமும், புகழும், அங்கீகாரமும் கிடைக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தை தோற்றுவிக்கின்றன. 

ஆனால் உண்மையில் கர்ணன் என்பவன் யார்? எப்படிப்பட்டவன்? கர்ணனின் வீரமும், கொடைத்தன்மையும் எல்லோராலும் பாடப்பட்டது தான். அதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆனால் அவனின் லட்சியம் என்னவென்பது தான் விஷயம். எப்படியாவது அர்ஜுனனை போரில் வெல்வது இல்லை கொல்வது  என்பதே அவனின் முற்று முதலான லட்சியம். உலகிலேயே மாற்றில்லாத வில்லாளி என்ற பெயரை பெற தடையாக இருந்தவன்; இருப்பவன் அர்ஜுனன் தான். அவனை வெல்வது இல்லை கொல்வது என்பது சாத்தியமா? என்பதை சற்று பார்ப்போம். 

கர்ணன் தன் வில்வித்வத்தை பூரணமாக பெற துரோணரை அணுகுகிறான். கர்ணனுக்கு துரோணர் வில் வித்தையை கற்பிக்கிறார். ஆனால் அர்ஜுனனோ அங்கே துரோணர் வைக்கும் பயிற்சிகளில் அர்ஜுனன் முதலாவதாக தேர்ச்சி அடைகிறான். துரோணரோ தன் மகன் அஸ்வத்தாமனுக்கு பெரிய விளிம்புள்ள பாத்திரமும் மற்றவர்களுக்கு சிறிய விளிம்புகளுள்ள பாத்திரங்களையும் கொடுத்து அதில் எவர் விரைவில் நீரை நிரப்புகிறாரோ அவரே வென்றவர் என்றெல்லாம் பயிற்சிகள் வைக்கிறார். அதிலும் அர்ஜுனன் வருணாஸ்த்திரத்தின் உதவியுடன் நீரை நிரப்பி வெல்கிறான்.

துரோணர் அர்ஜுனனுக்கு இரவில் இருட்டில் உணவளிக்க வேண்டாம் என்று உத்தரவிடுகிறார். ஆயினும் ஒருநாள் அர்ஜுனன் உணவருந்தும் இரவில் விளக்குகள் அணைந்தன. இருட்டில் உணவை உண்ண முடிவதை உணர்ந்த அர்ஜுனன் அது பழக்கத்தின் மூலம் சாத்தியப்படுவதை உணர்ந்தான். இலக்கு தெரிந்ததால் ஒளியில்லாவிட்டாலும் கைகள் வாய்க்கு உணவு கொண்டு செல்லுவது பாழாக்கத்தினால் சாத்தியம் என்றால் இருட்டில் இலக்கை அறிந்தால் அதை அம்பால் அடிப்பதும் சாத்தியப்படும் என்பதை உணர்கிறான். அன்றிலிருந்து இரவிலும் குறியை சீராக்கி இலக்குகளை எளிதில் வீழ்த்தப் பயிற்சி எடுக்கிறான். அதைக் கண்டா துரோணர் உலகிலேயே தலை சிறந்த வில்லாளியாக அர்ஜுனனை உருவாக்குவதாக அவனுக்கு வாக்களித்தார்.

இதை அறிந்த கர்ணன் திவ்யாஸ்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் துரோணரை விட மேலான குருவான பரசுராமரை அணுகினான். அர்ஜுனனை விட மேலாக வரவேண்டுமென்ற எண்ணத்தில் கர்ணன் எப்படியாவது போர்த்தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் வேட்கையில் பரசுராமரிடம் செல்கிறான். அங்காவது அவன் உண்மையை சொல்லியிருக்கலாம். ஆனால் தன்னை சூதனென்று சொல்லிக்கொண்டால் பரசுராமர் கற்பிக்க மறுப்பாரோ என்ற அச்சத்தில் தன்னை பிராமணன் என்று பொய் சொல்லிவிடுகிறான். இந்தப் பொய் தான் அவனுக்கு முதல் எதிரியாக வாய்த்தது.  பிற்பாடு பரசுராமருக்கு அவன் பிராமணன் அல்ல என்று தெரிய வரும்போது பிரம்மாஸ்திரம் மறக்கும்படியான சாபமிட வாய்ப்பளிக்கிறது. 

இரண்டாவதாக திரௌபதி துகிலுரியப்படுகையில் அவளை வேசி என்றழைத்தவன் கர்ணன். திரௌபதியின் மேலிருந்த தனிப்பட்ட ஆசை, அவள் சுயம்வரத்தில் தன்னை ஏற்காததால் வெறுப்பாக மாறியது. அந்த வெறுப்பு அவளை கௌரவர்கள் மானபங்கப்படுத்திய போது ஆதரிக்க வைத்தது. அப்படிப்பட்டவனை எவ்வாறு நல்லவன் என்று யாருமே யோசிக்க  மாட்டார்கள். மாறாக ஐவரை மணந்தவளை வேசி என்றது நியாயம் தான் என்ற நிலைப்பாட்டுக்கே வருவார்கள். கர்ணனின் இந்தச் செயல் தான் அர்ஜுனனை வெளிப்படையாக கர்ணனுக்கு எதிராக உறுதியெடுக்க வைத்தது. அர்ஜுனன் கர்ணனனை யுத்தத்தில் கொல்வேன் என்று உறுதி பூண்டான். 

மூன்றாவதாக அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தில் கர்ணனின் பங்கு மறக்கமுடியாதது. அபிமன்யு அறுவரிடம் ஒற்றை ஆளாக சண்டையிட்ட போது பின்னாலிருந்து அவன் வில்லை அறுத்தவனும் இதே கர்ணன் தான். கர்ணனின் இந்தச் செயல் தான் அர்ஜுனனை மேலும் வெறிகொள்ள வைத்தது. முறையான நேர்மையான யுத்தத்தை கர்ணன் மேற்கொள்ளாத நிலையில், கிருஷ்ணனால் மிக எளிதாக அர்ஜுனனின் மனத்தை மாற்றி தேர்க்காலை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த கர்ணனின் தலையைக் கொய்யச் செய்ய முடிந்தது. 

சரி, இருவரில் யார் சிறந்தவர்? அர்ஜுனனா? கர்ணனா? அர்ஜுனன் தன் மேல் காதல் கொண்டவள் ஊர்வசியே ஆயினும் அவளை தாய் ஸ்தானத்தில் பார்த்தமையால் சாபமிடப்பெற்றவன். அவளை புணர்ந்திருந்தால் கதை வேறாகியிருக்கும். ஆனாலும் நிதானம் காத்தவன். மாறாக கர்ணனோ, தன் பெயர் உலகிலேயே முழுமுதல் வீரன் என்ற இடத்தை அடைய வேண்டி பொய்யுரைத்து போர்க்கலையைக் கற்றவன். அதனால் சாபமிடப்பெற்றவன். 

மீண்டும் மீண்டும் சொல்வது யாதெனில் கர்ணனுக்கு தன் பெயரும் புகழும் பற்றிய அக்கறையே மிகையாயிருந்தது தெளிவாகிறது. யுத்தத்தின் நடுவில் தன்னை அரசனாக்கிய துரியனிடம் ஒரு வார்த்தை கூட கேளாமல் பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர வேறு எவரையும் கொல்ல மாட்டேன்  என்று குந்தியிடம் உறுதியளிக்கிறான் கர்ணன். ஏன் இப்படியொரு வாக்கை அளிக்க வேண்டும்? குந்தி கேட்டுவிட்டாளே என்பதற்காக மட்டும் என் இப்படியொரு வரத்தை அவளுக்கு அளிக்க வேண்டும்? முதல் முறையாக இல்லை என்று கூறியிருக்கலாமே! அர்ஜுனனைக் கொன்ற பிறகு அவனுக்கு பதிலாக நான் உன் மகனாக இருப்பேன் என்று ஏன் வாக்களிக்க வேண்டும்? அந்தளவுக்கு கர்ணனுக்கு அர்ஜுனன் மேல் தீராப் பொறாமையும், பகைமையும் இருந்திருக்கிறது. காரணம் அர்ஜுனனின் வீரத்தின் மேல் கர்ணனுக்கே அவ்வளவு மதிப்பும் அதனால் கசப்பும் இருந்திருக்கிறது. பீமனைக் கொல்லாமல் விடுவதைப் பற்றி அவ்வளவு எளிதாக எப்படி முடிவெடுக்க முடிந்தது? அவனை கொல்லாமல் விட்டால் அவன் துரியனைக் கொல்வான் என்பது தெரிந்தும் கர்ணனால் எப்படி இவ்வாறு ஒரு வரமளிக்க முடிந்தது? கேட்ட பிறகு எப்படி இல்லை என்று சொல்வது என்ற தயக்கம் ஒருபுறம் இருப்பினும், தன் புகழ் குன்றி விடுமோ என்ற பயமே காரணம்! துரியோதனன் தன்னை நம்பியே யுத்தத்தில் இறங்குகிறான் என்பது தெரிந்தும் அவனை கலந்தாலோசியாமல் தானே குந்திக்கு வரமளித்த கர்ணனைக் காட்டிலும், அர்ஜுனன் எப்படி எடுத்த செயலில் கடைசி வரையிலும் நின்று வெல்கிறான் என்பதைப் பார்ப்போம்! துரியனின் நலனில் எங்ஙனம் விலக்கமேற்பட்டது? 

பாண்டவர்கள் ஐவருக்கும் திரௌபதி உரிமையானவளாக இருப்பினும் ஒருவருக்கு உரிமையான ஆண்டில் தன் பதியுடன் தனித்து அவளிருக்கும் போது இன்னொரு பாண்டவன் அவ்வறையினுள் நுழையக் கூடாது என்ற ஏற்பாட்டைச் செய்து கொள்கின்றனர். மீறினால் ஒரு ஆண்டு காலம் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் நிச்சயித்துக் கொள்கின்றனர். அவ்வாறிருக்க யுதிட்டிரனும் திரௌபதியும் தனித்திருக்கும் வேளையில், அர்ஜுனன் ஒரு ஏழை ப்ராமணனுக்காக அவ்வறைக்குள்ளே நுழைய நேர்கிறது. பிராமணன் தன் பசுக்களைக் கள்வர்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டி அர்ஜுனனிடம் கோர, அர்ஜுனன் தன் வில்லையெடுக்க அறைக்குள் நுழைய நேர்கிறது. ஒரு நன்மை கருதி அர்ஜுனன் தன் வாக்கை மீறுகிறான். தங்கள் ராஜ்யத்திலுள்ள ஏழைக்கு நீதி கிடைக்க  ஒப்பந்தத்தை மீறி சென்று கலவரக்கூட்டத்தை வென்று பிராமணனுக்கு பசுக்களை திருப்பி அளிக்கிறான். தன் தவறுக்கு பிராயச்சித்தமாக ஒருவருடம் சிவயோகியாய் வனவாசமும் மேற்கொள்கிறான். சொன்ன சொல் மாறாத கர்மயோகியாக  விளங்குகிறான் அர்ஜுனன். வாக்கை மீறினாலும் அதற்கான தண்டனையையும் முறையாக ஏற்கிறான். 

அர்ஜுனன் தன் வீரத்திலோ, கடமையிலோ, வாக்கிலோ, வேகத்திலோ எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத  தூய வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்று விரும்பியவன். அதனாலேயே தான் அவனால் இறுதி வரை போர் செய்து பரமசிவனையும் திருப்தி செய்து பாசுபதாஸ்திரம் என்ற ஆயுதத்தை வரமாக பெற முடிந்தது. தன்னை சரண் அடைந்தவன் அக்கினியாக இருப்பினும்,  ஒரு எளிய ஏழை பிராமணனாக இருப்பினும் இருவரையும்   ஒன்றாகவே பாவித்து அவர்களுக்காக வில்லெடுக்க விழைந்தவன். எதிர்ப்பவன் இந்திரனாகவே இருப்பினும், தேவ சேனைகளாகவே இருப்பினும் பின்வாங்காமல் காண்டவ தகனத்தை துணிந்து நிகழ்த்தியவன். கர்ணனோ, தனக்கோ, தன் புகழுக்கோ இழுக்கேற்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தவன். வெற்றியை விட புகழில் குறியுள்ளவனாக இருந்தவன். அதனால் தான் இந்திரனே வந்து கவச குண்டலங்களை தானம் கேட்டபோதும் மறுக்காமல் கொடையளித்து அதன் மூலம் சக்தி ஆயுதத்தை வரமாகப்பெற்றவன். 

சரி, பதினோராம் நாள் போரிலே அர்ஜுனன் ஏன் கர்ணனால் கொல்லப்படவில்லை? ஏனென்றால் அது அவ்வளவு எளிதல்ல. பாரதப் போருக்கு முன்பே அர்ஜுனனும், கர்ணனும் மோதிய நிகழ்வுகள் உண்டு.  அர்ஜுனனை வெல்வது, அதன் மூலம் முற்று முதலான வீரன் என்ற புகழை ஈட்டுவது என்பதே கர்ணனின் லட்சியம். எடுத்த எடுப்பில் அர்ஜுனனை போருக்கழைக்கிறான் கர்ணன். அதன் மூலம் துரியனின் கவனத்தை ஈர்த்து சேரக்கூடாத தரப்பில் சேர்கிறான். மாறாக அப்போது அஸ்தினபுரியின் எதிரி நாடாக இருந்த மகதத்தில் ஜராசந்தனுடன் சேர்ந்து ஒட்டுமொத்த அஸ்தினபுரிக்கும் எதிர்த்தரப்பாக நின்றிருக்கலாம்.  ஜராசந்தன் தரப்பில் சேர்ந்திருந்தால் இன்னும் எளிதாக அரசனாகியிருக்கலாம். ஆனால் அரசனாவதை விட அர்ஜுனனாவதே லட்சியம் என்ற படியால் குரு குல இளவரசர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களத்தில் துரியனிடம் சேர்ந்தான். ஏனென்றால் அர்ஜுனன் முன்னால் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவனை துரியன் பக்கம் சாய வைத்தது.

திரௌபதியின் சுயம்வரத்தில் அர்ஜுனன் வென்றது போக, துரோணரின் குரு தட்சிணைக்காக துருபதனை வெல்ல முற்பட்ட போதும் கர்ணனை விட அர்ஜுனனே மேலானவனாக நின்றான். கர்ணனால் வெல்ல முடியாத பாஞ்சாலத்தை அர்ஜுனன் வென்றான். 12 ஆண்டுகால வனவாசம் பாண்டவருக்கு என்று ஆன பின்பு துரியோதனன் கந்தர்வர்களால் பிடிக்கப்படுகையில், கர்ணனாலன்றி அர்ஜுனனே துரியனை விடுவித்தான். விராட பருவத்திலே ஒட்டு மொத்த கௌரவ சேனைகளின் முன்பும், பீஷ்மர், கிருபர், துரோணர், அஸ்வத்தாமா, துரியோதனன், துச்சாதனன் மற்றும் கர்ணன் ஆகிய அனைத்து மஹாரதர்களையும் வெறும் பயம்கொள்ளியான உத்தரனை சாரதியாகக் கொண்டு தனித்து நின்று வென்றான் அர்ஜுனன். ஈஸ்வரனிடமே போர் புரிந்து வரம் பெற்றான். தேவர்களிடமும், இந்திரனிடமும் போர் புரிந்து வென்றான். இப்படிப்பட்டவனை எப்படி கர்ணனால் வெல்ல முடியும்? 

ஆயினும் நம் மக்கள் கர்ணனையே பெரிதும் விரும்புகிறார்கள். பல நேரங்களில் இந்த மனநிலையே சமூக விரோதிகளை ஹீரோக்களாக பார்க்கவும், நாட்டிற்காக உயிர் துறக்கும் இந்திய ராணுவத்தை காஷ்மீரில் அத்துமீறல் செய்யும் அயோக்கியர்களாக பார்க்கவும் வைக்கிறது போலும். காஷ்மீரத்தில் வெள்ளம் வந்த போது தேவையான இந்திய ராணுவம் இப்போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டவுடன் கொலைகார அமைப்பாகத் தெரிகிறது. அரக்கர்களான தீவிரவாதிகள் ஹீரோக்களாக வழிபடப்படுகிறார்கள். மஹாபாரத, ராமாயண காலம் முதலே இது தான் நிலை போலும்.

சனி, 2 ஜூலை, 2016

புதிதாய் என்ன சொல்வேன்?

இது என் கன்னி கட்டுரை. இந்த உலகத்தில் இதுவரை எத்தனையோ கோடானு கோடி விஷயங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. எத்தனை எத்தனையோ விதமான மொழிகளில்,  எவ்வளவோ படிக்கப்படாமலேயே உள்ளன. இதில் நான் வேறு எதற்க்காக எழுத வேண்டும்? யோசித்துப் பார்த்தால் நான் புதிதாக எதையும் எழுதி கிழித்து விடப்போவதில்லை. இங்கே உள்ளவை அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டு உள்ளன. அதை மறுபடியும் வாசித்துப் புதுப்பித்து நாமாக எழுதுவது போல கற்பனை செய்து கொண்டு சொன்னதையே திரும்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எதை நாம் எடுத்தாளுகிறோமோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

ஓரிடத்தில் படித்தது, - "நாம் பேசுவது அனைத்தும் நமக்கே சொல்லிக்கொள்வது தான். நமக்கு தெரிந்தவற்றை நம் வாயாலேயே கூறும்போது அதை நிச்சயப்படுத்திக்கொள்கிறோம். அவ்வளவே... சொல்லும்போது எதையும் தெரிந்து கொள்வது இல்லை. ஆனால் மற்றவர் பேசுகையில் நாம் உண்மையில் புதிதாக விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்." எனவே எழுதுவதற்கு நேரம் செலவிடுவதை விட படிப்பதற்கு நேரம் செலவிட்டால் என்ன என்ற நினைப்பு தான் இத்தனை நாட்களாக என்னை எழுத விடாமல் செய்து கொண்டிருந்தது.

ஒருவேளை சொல்லப்படவும் இல்லாமல் கேட்கப்படவும் இல்லாமல் ஏதேனும் விஷயங்கள் இம்மண்ணுலகில் உள்ளனவா என்ன? இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அப்படிப்பட்ட   விஷயங்களைக் கண்டுபிடித்து நாம் எழுதினால் மட்டும் என்ன நடந்து  விடப்போகிறது? புதிதாக எதையாவது கண்டுபிடித்து சொல்கிறேன் பேர்வழி என்று யோசிக்க துவங்கினாலே இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொண்ட பின்பல்லவா இது புதியது என்று முடிவுக்கு வரவேண்டும்? என்ற நியாயமான கேள்வி மனதைக் குடைகிறது. அதுவே புதியதாய் எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறது.


நம் பேச்சை எவன் கேட்கப்போகின்றான்?  எத்தனையோ நியாயங்கள் அப்படி கேட்கப்படாமலேயே போயிருக்கின்றன. சிலர் உண்மை என்னும் விஷயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுவார்கள். இப்போது சமீபத்தில் ஸ்வாதி என்னும் பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தைப் பார்ப்போம். இப்போது தான் கொலையாளி பெயர் ராம்குமார் என்று  தெரியவந்துள்ளது. இது தெரிய வருவதற்கு முன்பே சிலபேர் கொலையாளியின் பெயர் பிலால் எனவும், பிலால் முகமது எனவும் முகநூலில் பதிவு போட்டனர். ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே அதை தெரிந்தது போல பேசுவது. தேவையா இந்த பிழைப்பு?

மேலும் நமக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயம் நாம் எழுதலாம் என்று நினைக்கும்போதே மற்றவர்க்கும் தெரிந்து போய் விடுகிறதே!! இது என்ன சோதனை? நமக்கு முன்பே மற்றவர்கள் அதை சொல்லி விடுகிறார்கள். எழுதினால் எஸ்க்ளூஸிவ் ஆக இருக்க வேண்டாமா? அப்படி யோசித்து பார்த்தால் நமக்கும் டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பற்காக எஸ்க்ளூஸிவ் செய்திகள் கொடுக்க 24 மணி நேரமும் தவியாய் தவிக்கும் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம்? நமக்கு தான் எல்லாமே தெரிந்து விடுகிறதே! அதை நம்மோடு வைத்துக் கொண்டால் போதுமல்லவா? ஏன் மற்றவர்க்கு சொல்ல வேண்டும்?

இப்படியெல்லாம் பலவாறாக யோசித்த பின் ஒன்றைப் புரிந்து கொண்டேன். நமக்கு புதிதாக எழுத ஒன்றும் இல்லை. மற்றவர்க்கு என்ன தெரிகிறதோ, அதே தான் நமக்கும் தெரிகிறது. அதனால் தான் நாம் எதையும் சொல்லவோ, எழுதவோ முடியவில்லை. இதை குறைந்தபட்சம் நேர்மையாக ஒப்புக் கொள்வோம். அந்த ஒப்புகையை மனம் விட்டு எழுதியதால் என்ன என்று தோன்றியதால் வந்த விளைவு இந்த பதிவு. உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று நீங்கள் கேட்டால், என் பதில், எனக்கு மட்டும் இப்படி தோன்றியதன் விளைவே இந்த பதிவு. எதுவும் எஸ்க்ளுசிவ் ஆக இருக்க வேண்டும் பாருங்கள்!!