திருக்குறளில் இருந்து சங்க இலக்கியங்களுக்கு போவோம். சனாதன தர்மத்தின் வாழ்க்கை முறையை பற்றி திருவள்ளுவர் 3 பாகமாக பிரித்துக் கூறுகிறார்..
1. அறம், 2. பொருள், 3. இன்பம். வடமொழியின் நான்மறை காட்டும் 1. தர்மம்(அறம்), 2. அர்த்தம் (பொருள்), 3. காமம் (இன்பம்) மற்றும் 4. மோட்ஷம் (வீடுபேறு).
இந்த நான்காவது பகுதியான வீடுபேறு அடையும் நிலையை பற்றி வள்ளுவர் எனோ எழுதவில்லை போலும்.. அல்லது எழுதியவை நமக்கு கிடைக்கவில்லையா எனத்தெரியவில்லை.. சனாதன தர்மமும், தமிழரமும் ஒன்று தான் என நிரூபிக்க இந்த ஒரு ஒற்றுமையே போதும்.. ஆனால் இந்த அளவுக்கு தெளிவாக தன்மையாக என்னை பகிரவிடாமல் செய்தனர் போலி ID போராளிகள்..
தமிழ் வாழ்க்கை முறையும் சனாதன தர்மமும் ஒன்று தான் என்பதற்கு வள்ளுவம் கூறும் குரல்களில் இருந்தும் மேற்கோள் காட்டவியலும்..
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."
மேலும் மிக முக்கியமாக அந்தணரை விட மன்னர்களே அதிகாரமும், வலுமையும் மிக்கவர்களாக தமிழ் நிலத்தில் இருந்தனர் என்பதற்கு பின்வரும் குறளே சான்று...
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்."
மறுமொழிகள் இடும் போது முகமறியாய் புர்ச்சி போராளி ஒருவர் சொன்னது, பார்ப்பரவுங்க மூவேந்தரையும் ஏமாற்றி வாழ்ந்தாங்கனு.. ஆனால் வள்ளுவர் சொல்லிய மேற்கண்ட குறள் தமிழரின் சனாதன தர்மத்தில் அந்தணர் இடம் என்னவென்பதையும், அரசர் இடம் அதற்கும் மேலே என்பதையும் தெளிவாக கூறுகிறது...
சாதிக் கொடுமைகளுக்கும் சனாதன தர்மம் காட்டிய வாழ்க்கை முறைக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை இன்னும் வலுவாக என்னால் ஆதாரத்துடன் காட்டவியலும்.. மன்னன் கோலை விட அந்தணர் சொல்லுக்கு மதிப்பு இல்லை என்ற தமிழர் நிலத்தில் மன்னரை மீறி எவ்வாறு அந்தணர் சாதிக்கொடுமைகளை நிகழ்த்தியிருக்கவியலும்? மன்னர்களும், அவர்களின் வாரிசுகளுமே படை நடத்தி அதிகாரம் செய்த காலத்தில் அவர்களை மீறி அந்தணர் ஒன்றும் செய்திருக்க முடியாது.. மன்னராட்சி காலம் முடிந்து முகலாய ஆட்சியில் சத்திரியர் வீழ்ந்த போதும், அதன் பிறகும் வந்த மன்னர்களின் வாரிசுகளான ஜமீன்தார்கள் ஆட்சியிலும் தீண்டாமையும், சாதிக் கொடுமைகளும் தலைவிரித்தாடிய சான்றுகள் அதிகம் கிடைக்கின்றன வரலாற்றில்.. அதன் பிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஒட்டுமொத்த பாரதமும் பஞ்சத்திலும், பட்டினியாலும் சிறையிலும் வாடியிருந்ததும், சில ஆண்ட சாதியினரும், பார்ப்பனர்களும், பணம் படைத்த முதலியார்களை, பிள்ளைவாள்களும், செட்டியார்களும் பிரிட்டிஷ் காலத்தில் செல்வாக்கோடு வாழ்ந்திருக்க, மற்றைய பிரிவினர் தொடர்ந்து மதம் மாற்றப்பட்டனர் என்பதே வரலாறு...
தீண்டாமை இன்றும் பேசப்படுகிறது... ஆனால் அது கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகு நின்று விடுகிறதா? கிறிஸ்த்தவத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் துளியும் இல்லை. ஆனாலும் கிறிஸ்தவ நாடார், தலித் கிறிஸ்தவர் வீட்டில் பெண் கொடுப்பதில்லை.
இங்கே முதலில் சாதி அரசியல் பேசி பிராமணரை தனிமை படுத்திவிட்டால் பிறகு எல்லாரையும் ஒன்று சேர்த்து சனாதன தர்மத்தை ஒழித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் சனாதன தர்மம் வாழ்வதே சத்திரியர்களாலும், வைசிய, சூத்திர வர்ணங்களாலும் தான் என்பது எந்த வெண்ணைக்கும் புரிவது இல்லை..
அந்தணர், வேதியர், மறையோர்,பார்ப்பனர் என்றெல்லாம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுவது தமிழகத்தில் மூவேந்தர்களின் ஆட்சியில் வாழ்ந்த பிராமணர்களையே.. அவர்கள் கோவில்களில் ஆகமம் கூறும் வடமொழியை பயன்படுத்தி வழிபாடு செய்வதை வைத்து அவரை தமிழர் அல்லர் என்றும் தமிழரின் வழிபாட்டு முறை வேறு என்றும் நிறுவ முயல்வோர் உண்டு... ஆனால் சனாதன தர்மத்தில் படையல் (நிவேதனம்), பூசை (அர்ச்சனை), சுடராட்டு (தீபாராதனை), குடமுழுக்கு (கும்பாபிஷேகம்), நாள், நட்சத்திரம் பார்ப்பது, ராசி, கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்வது எல்லாமும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வழக்கத்தில் இருந்து வரும் பண்பாடே.. பலவேறு தெய்வங்களுக்கும் பல்வேறு சமர்ப்பணங்கள்.. இறைச்சி, கள், சாராயம், மீன் முதல் பொங்கல், புளியோதரை, தயிர் சோறு என்று ஒரு சனாதனி தான் அருந்தும் உணவை படைத்தே பேரிறையை வணங்கி வந்திருக்கிறான். பலி கொடுக்கும் வழக்கமும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.. இவ்வழக்கங்கள் தமிழரிடம் மட்டுமல்லாமல் பாரதம் முழுவதுமே இருந்து வந்துள்ளது.. தமிழர்களின் 5 நிலங்களுக்கு கடவுளர்களாக தொல்காப்பியம் காட்டுவது, 1. இந்திரன், 2. முருகன், 3. திருமால், 4. கொற்றவை மற்றும் 5. வருணன். இவர்களை பற்றி சங்க இலக்கியங்களில் ஏராளமான தரவுகள் உள்ளன.
லிங்க வழிபாடு தமிழரின் தொல்வழிபாடு ஆகும், அதுவும் பாரதம் முழுமையும் பரந்திருந்தது என்பதற்கு ஏராளமான கோவில்களும் தொல்பொருள் ஆய்வுகுட்படுத்தப்பட்ட இடங்களும் சான்றாகின்றன..
சாதி அரசியல் எடுபடாமல் போவதற்கு இந்தப் பண்பாடே முழுமுதல் காரணம். இதை மூடப்பழக்கங்கள் என்று கூறி சிதைத்து விட்டால் இந்தியாவை முழுவதுமாக தன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடமுடியுமென்று இங்கிலாந்து பாராளுமன்றத்திலே பேசியவர் மெக்காலே எனப்படும் ஆங்கில பிரபு. பேசிய நாள் 2ம் பிப்ரவரி 1835. ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவினை முயற்சிகள் திட்டமிட்டு இவர்களால் உருவாக்கப்பட்டன..
தமிழனின் அடையாளங்களை ஹிந்துத்வம் எடுத்துக்கொள்கிறதா? படையல் தான் நிவேதனம், சுடராட்டு தான் தீபாராதனை, மலராட்டு தான் அர்ச்சனை, பூசனை தான் பூஜை, உயிர்க்கொடை தான் பலி. அகண்ட பாரதத்தின் மூலை முடுக்கெல்லாம் இதே வழியில் தான் வழிபாடுகள். வழிபடும் முறைகளில் மட்டுமே ஒற்றுமை இல்லை. பாரதம் மட்டுமல்ல, தமிழன் சென்று கொடி நாட்டிய தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் மலேசியா என்று ஹிந்து மத உருவ வழிபாடு உள்ள எல்லா இடங்களிலும் இந்த முறைகளில் தான் வழிபாடு. அப்புறம் எப்படி தமிழரின் கடவுளும், வழிபாட்டு முறையும் வேறாயிற்று?தான் என்ன உண்டு வாழ்கிறானோ அதை தான் தமிழனும், மற்ற மாநிலங்களிலுள்ள பாரதீயனும் இறைவனுக்கு படைத்தான். மிக குறைந்த பட்சமா 3000 வருஷத்துக்கு முன்னாடி தமிழன் எழுதி வைத்த ஆவணம் தான் தொல்காப்பியம். நமக்கு கிடைத்த நூல்களிலேயே மிக பழமையானது. 5 நிலங்களுக்கும் 5 கடவுளர்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. அந்த 5 இல் திருமாலும், சக்தியும், இந்திரனும், முருகனும், வருணனும் உண்டு. இந்த ஐவரும் வடக்கிலும் உண்டு. அப்புறம் எப்படி தமிழரின் கடவுள் வேறாயிற்று?
சுடலை தான் சிவன். மாயவன் தான் கண்ணன். முருகன் தான் ஸ்கந்தன், இந்திரன், வருணன் அப்படியே அங்கும். கொற்றவையாகிய சக்திக்கு பல ரூபங்கள், பெயர்கள் இந்தியா முழுக்க! அப்புறம் எப்படிடா தமிழனுக்கு வேற வழிபாடுனு சொல்றீங்க? இந்த நடை பயணம் தான் பாத யாத்திரை. அதை அப்படியே வேளாங்ககண்ணிக்கு பாத யாத்திரை என்கிற பெயரில் லாவுவது தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம். மேரி மாதாவுக்கு விளக்கு பூஜை, இயேசு கிறிஸ்துக்கு முழு நேர இரவு ஜெபம் இதெல்லாம் தான் மக்களே நம் தமிழின பண்பாட்டு அடையாளங்களைச்சுட்டு, தனதாக்கிக் கொள்ளும் கேடுகெட்ட எச்சை புறம்போக்கு மாமாப்பயல்கள் வேலை... சனாதன தர்மம் 1000 கணக்கான ஆண்டுகளாகி பரவி விரிந்து வேரூன்றி நிற்கும் மா கடல். அதை கூரையிட்டு மறைக்கவியலாது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக