இது என் கன்னி கட்டுரை. இந்த உலகத்தில் இதுவரை எத்தனையோ கோடானு கோடி விஷயங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. எத்தனை எத்தனையோ விதமான மொழிகளில், எவ்வளவோ படிக்கப்படாமலேயே உள்ளன. இதில் நான் வேறு எதற்க்காக எழுத வேண்டும்? யோசித்துப் பார்த்தால் நான் புதிதாக எதையும் எழுதி கிழித்து விடப்போவதில்லை. இங்கே உள்ளவை அனைத்தும் ஏற்கனவே சொல்லப்பட்டு உள்ளன. அதை மறுபடியும் வாசித்துப் புதுப்பித்து நாமாக எழுதுவது போல கற்பனை செய்து கொண்டு சொன்னதையே திரும்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எதை நாம் எடுத்தாளுகிறோமோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
ஓரிடத்தில் படித்தது, - "நாம் பேசுவது அனைத்தும் நமக்கே சொல்லிக்கொள்வது தான். நமக்கு தெரிந்தவற்றை நம் வாயாலேயே கூறும்போது அதை நிச்சயப்படுத்திக்கொள்கிறோம். அவ்வளவே... சொல்லும்போது எதையும் தெரிந்து கொள்வது இல்லை. ஆனால் மற்றவர் பேசுகையில் நாம் உண்மையில் புதிதாக விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்." எனவே எழுதுவதற்கு நேரம் செலவிடுவதை விட படிப்பதற்கு நேரம் செலவிட்டால் என்ன என்ற நினைப்பு தான் இத்தனை நாட்களாக என்னை எழுத விடாமல் செய்து கொண்டிருந்தது.
ஒருவேளை சொல்லப்படவும் இல்லாமல் கேட்கப்படவும் இல்லாமல் ஏதேனும் விஷயங்கள் இம்மண்ணுலகில் உள்ளனவா என்ன? இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடித்து நாம் எழுதினால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது? புதிதாக எதையாவது கண்டுபிடித்து சொல்கிறேன் பேர்வழி என்று யோசிக்க துவங்கினாலே இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொண்ட பின்பல்லவா இது புதியது என்று முடிவுக்கு வரவேண்டும்? என்ற நியாயமான கேள்வி மனதைக் குடைகிறது. அதுவே புதியதாய் எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறது.
நம் பேச்சை எவன் கேட்கப்போகின்றான்? எத்தனையோ நியாயங்கள் அப்படி கேட்கப்படாமலேயே போயிருக்கின்றன. சிலர் உண்மை என்னும் விஷயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுவார்கள். இப்போது சமீபத்தில் ஸ்வாதி என்னும் பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தைப் பார்ப்போம். இப்போது தான் கொலையாளி பெயர் ராம்குமார் என்று தெரியவந்துள்ளது. இது தெரிய வருவதற்கு முன்பே சிலபேர் கொலையாளியின் பெயர் பிலால் எனவும், பிலால் முகமது எனவும் முகநூலில் பதிவு போட்டனர். ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே அதை தெரிந்தது போல பேசுவது. தேவையா இந்த பிழைப்பு?
மேலும் நமக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயம் நாம் எழுதலாம் என்று நினைக்கும்போதே மற்றவர்க்கும் தெரிந்து போய் விடுகிறதே!! இது என்ன சோதனை? நமக்கு முன்பே மற்றவர்கள் அதை சொல்லி விடுகிறார்கள். எழுதினால் எஸ்க்ளூஸிவ் ஆக இருக்க வேண்டாமா? அப்படி யோசித்து பார்த்தால் நமக்கும் டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பற்காக எஸ்க்ளூஸிவ் செய்திகள் கொடுக்க 24 மணி நேரமும் தவியாய் தவிக்கும் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம்? நமக்கு தான் எல்லாமே தெரிந்து விடுகிறதே! அதை நம்மோடு வைத்துக் கொண்டால் போதுமல்லவா? ஏன் மற்றவர்க்கு சொல்ல வேண்டும்?
இப்படியெல்லாம் பலவாறாக யோசித்த பின் ஒன்றைப் புரிந்து கொண்டேன். நமக்கு புதிதாக எழுத ஒன்றும் இல்லை. மற்றவர்க்கு என்ன தெரிகிறதோ, அதே தான் நமக்கும் தெரிகிறது. அதனால் தான் நாம் எதையும் சொல்லவோ, எழுதவோ முடியவில்லை. இதை குறைந்தபட்சம் நேர்மையாக ஒப்புக் கொள்வோம். அந்த ஒப்புகையை மனம் விட்டு எழுதியதால் என்ன என்று தோன்றியதால் வந்த விளைவு இந்த பதிவு. உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று நீங்கள் கேட்டால், என் பதில், எனக்கு மட்டும் இப்படி தோன்றியதன் விளைவே இந்த பதிவு. எதுவும் எஸ்க்ளுசிவ் ஆக இருக்க வேண்டும் பாருங்கள்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக